பிரபல நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி மரணம் - திரையுலகினர் அஞ்சலி!
பழம்பெரும் நடிகரான ஜாவேத் கான் அம்ரோஹி மரணமடைந்தார்.
ஜாவேத் கான்
1980களின் பிற்பகுதியில், ஜாவேத் கான் அம்ரோஹி, தூர்தாஷனில் பிரபலமான நகைச்சுவைத் தொடரான நுக்கத் -இல் சலூனை நடத்தி வந்த கரீம் ஹஜாம் என்கிற முடிதிருத்தும் தொழிலாளியாகப் பிரபலமானார்.
ஜாவேத் கான் என்று பரவலாக அறியப்படும் அவர், இந்திய மக்கள் தியேட்டர் அசோசியேஷனின் (IPTA) தீவிர உறுப்பினராக இருந்தார். மேலும் லாட்லா, லகான், அந்தாஸ் அப்னா அப்னா, சக் தே இந்தியா,
மறைவு
கூலி நம்பர் 1, ஹம் ஹைன் ரஹி பியார் கே போன்ற பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்தார். அம்ரோஹிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நீண்டகால நோய்க்குப் பிறகு, தனது 70களின் முற்பகுதியில் உள்ள கான்,
நுரையீரல் செயலிழப்பு காரணமாக மும்பை மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.