சிம்பு திருமணம் எப்போது தெரியுமா? - பிரபல நடிகர் தெரிவித்த தகவல்
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் ஜெய் தெரிவித்த தகவல் சிம்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் சிலம்பரசன் மீண்டும் முழு வீச்சில் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் மஹா, மாநாடு, பத்து தல, வெந்து தணியும் காடு ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இதனிடையே சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஜெய், பகவதி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சாருடன் இணைந்து நடிக்க வேண்டி இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரோ நீ தான் ஹீரோ ஆகிட்ட இல்ல.. அப்புறம் ஏன்..? என்று கேட்டதாக ஜெய் தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம் திருமணம் எப்போது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெய், சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், அநேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஜெய்யின் இந்த தகவலால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.