திவ்யா ஸ்ரீதர் பிரச்சனைக்கும் காரணம் ஈஸ்வர் ? வெளியான அதிர்ச்சி தகவல்
மகாலட்சுமி, திவ்யா ஸ்ரீதர் என சின்னத்திரை நடிகைகளின் பிரச்சனையில் ஈஸ்வரின் பெயர் வந்துள்ளது பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
சர்சையான சீரியல் நடிகை
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வர் ரகுநாதன். இவர் தொடர்ந்து சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.
தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை திவ்யா ஸ்ரீதர் அர்னவ் இடையேயான பிரச்சனைக்கு ஈஸ்வர் தான் காரணம் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சினைக்கு காரணம் ஈஸ்வர்
நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தனது கணவர் நெருக்கமாக உள்ளதாக புகார் தெரிவித்திருந்தார்.
கணவரை விவாகரத்து செய்த நடிகை மகாலட்சுமி தனது கணவரை அபகரிக்க முயல்வதாக ஜெயஸ்ரீ பரபரப்பி குற்றச்சாட்டை முன்வைத்தார். சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை நடிகை மகாலட்சுமி இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் நடிகை திவ்யா, அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் தனது வயிற்றில் உள்ள கரு கலைந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஈஸ்வரால் பரபரப்பு
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அர்னவ், தங்களுக்குள் சாதாரணமாக நடக்கும் சண்டைகளை ஈஸ்வர் ஊதி பெரிதாக்கி விடுவதாகவும், எனக்கு நல்லது செய்வதாக கூறி தொடர்ந்து கெடுதல் செய்து வருவதாகவும், அவனுடன் இணைந்து தான் தனது மனைவி கருவை கலைக்க உள்ளதாக நாடகம் போடுவதாகவும் கூறினார்.
இவ்வாறு சின்னத்திரை நடிகைகளின் பிரச்சனையில் ஈஸ்வரின் பெயர் இடம்பெறுவது சின்னதிரை உலகில் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.