நானும் தனுஷும் அப்படி; இதனால் தான் 6 வருஷமா பேசிக்கல - போட்டுடைத்த ஜிவி பிரகாஷ்!
தனுஷுடன் 6 வருடங்கள் பேசாமல் இருந்ததற்க்கான காரணம் குறித்து நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார்.
ஜிவி பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து, தனது இசைக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
மேலும், நடிகராகவும் பல படங்களில் கலக்கி வரும், ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் கள்வன் படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷிடம், தனுஷுடனான நட்பு குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
பிரச்சனை வந்த
அதற்கு பதிலளித்த அவர் "ப்ரெண்டுனா என்னைக்குமே நமக்கு ஏதும் பிரச்சினையோ அல்லது எதுவானாலும் அந்த நேரத்தில் நம்மோடு தூண் போன்று நிற்கவேண்டும். அப்படி தனுஷும் நானும் இரண்டு தூண்களை போன்றவர்கள். தேவைப்படும் நேரத்தில் கட்டாயமாக இருவரும் ஒருவருக்காக ஒருவர் இருப்போம்.
நண்பர்கள் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதற்கு பிறகு சேர்ந்துவிடுவார்கள். அப்படித்தான் எனக்கும், தனுஷுக்கும் பிரச்சனை வந்தது. இதனால் நாங்கள் இருவரும் 6 வருடங்கள் பேசாமல் இருந்தோம். அதன் பின் மீண்டும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.