25 வருடம் லிவிங் டூ கெதர் வாழ்க்கை; அந்த மாதிரி பெண்களை பிடிக்காது - மனம் திறந்த நடிகர்
25 ஆண்டுகளாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக நடிகர் ஜி.எம்.குமார் பேசியுள்ளார்.
ஜி.எம்.குமார்
பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த ஜிஎம்குமார், அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் என சில படங்களை இயக்கியுள்ளார்.
அதன் பிறகு, வெயில், அவன் இவன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
லிவ்இன் ரிலேஷன்ஷிப்
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் காதல், லிவிஇன் ரிலேஷன்ஷிப் குறித்து பேசியுள்ளார். இதில் பேசிய அவர், "காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை காமம் மட்டும் தான். காமம் கெட்டவார்த்தையாக பார்க்கப்படுவதால் அதை காதல் என்கிறார்கள். கண், மூக்கு, வாய், இதெல்லாம் கெட்ட வார்த்தை இல்லை. ஆனால், அந்தரங்க உறுப்புகள் கெட்ட வார்த்தைகளாகிவிட்டன.
காமத்துடன் கூடிய நட்பு வெகு ஆண்டுகளுக்கும் மேல் ஒரு துணையுடன் இருந்தால் அதை காதல் எனச்சொல்கிறார்களா எனத் தெரியவில்லை. நான் 25 ஆண்டுகளாக லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன். ஆனால், அது கடைசி வரை இல்லாமல்போய்விட்டது. காரணம் சலிப்பு தான்.
ஸ்டைலான பெண்கள்
காதல் திருமணம் என்பது ஒரு சமூக அமைப்புக்காகவே தவிர மனிதர்களுக்கானது இல்லை. ஒரே சாதியில் குழந்தைபெற்றுக்கொள்வது போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை. தற்போது சொந்தத்தில் திருமணம் செய்தால், ஒரு தலைமுறையிலேயே குழந்தை ஊனமாக பிறக்கிறது அப்படி இருக்கும் போது, 45 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சாதியை எப்படி பராமரித்து வந்திருக்க முடியும்?
தமிழ் பேசக்கூடிய நிலப்பரப்பில் தமிழர்கள் இருந்ததால் தமிழ் பேசுறாங்க. இதில் தமிழ் பேசுறவங்க மட்டும் இருந்திருக்க முடியாது. இவன் தமிழன், இவன் தெலுங்கன், மலையாளின்னு எப்படி சொல்லமுடியும். எல்லோருமே இங்க அசல் கிடையாது.
தனக்கு பிடித்த நபருடன் காமம் இல்லாமல், அரேஞ்சுடு மேரேஜ்ஜில் பிறர் சொல்லும் நபரிடம் காமம் வைத்து கொள்ள சொல்வது எப்படி சாத்தியம்? இழுத்து போர்த்திக் கொண்டு, அழுதுக்கொண்டு இருக்கும் பெண்களை பிடிக்காது, தைரியமான பெண்களை, ஸ்டைலான பெண்களைதான் நான் விரும்புவேன்" என கூறியுள்ளார்.