ஐயோ உங்க வம்புக்கு நா வரல... புகைப்படத்தை நீக்கிய ஃபகத் ஃபாசில்!
நடிகர் ஃபகத் நடித்த படத்தின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மாமன்னன்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் நடிப்பில் மாமன்னன் படம் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. இந்த கதை தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், எம்.எல்.ஏ. ஆன பிறகும் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுவதும், அதை தந்தையும் மகனும் சேர்ந்து எதிர்ப்பதும் கதையாக அமைந்திருந்தது.
ரத்னவேலு கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் மிக சிறப்பாக நடித்தார். ஆனால், ரத்னவேலு கதாபாத்திரம் சாதியப் பெருமை அடங்கிய கெளரவத்தை பின்பற்றும், பாதுகாக்கும், அடிமைத்தனத்தை விரும்பும் வில்லன் கதாபாத்திரம்.
கடுப்பான ஃபகத்
இந்நிலையில், இவரது கதாபாத்திரம் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த படத்தில் ரத்னவேலு பகுதிகள் மட்டும் தனியாக கட் செய்யப்பட்டு, அதில் சாதியை பெருமைப்படுத்தும் பாடல்கள் இணைக்கப்பட்ட வீடியோக்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மேலும், இதில் பலர் ஜாதியை கொண்டாடும் பாடல்களை எடிட் செய்து வைரலாகி வருகின்றனர். இதற்கு மத்தியில் ஃபகத் ஃபாசில் தனது பேஸ்புக் கவர் படத்தில் ரத்னவேல் கதாப்பாத்திர தோற்றத்தை வைக்க, அதையும் சாதி ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது பேஸ்புக் கவரில் இருந்த ரத்னவேல் கதாபாத்திரத்தின் படத்தை பகத் பாசில் நீக்கி இருக்கிறார். தமிழ்நாட்டில் ரத்னவேல் கதாபாத்திரம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்ந்தே அவர் அப்படத்தை நீக்கியதாக கூறுகிறார்கள். இது தற்பொழுது வைரலாகி வருகிறது.