மிஸ்டர் சந்திரமௌலி நடிகர் ரா. சங்கரன் காலமானார்!!
மௌன ராகம் படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்து பிரபலமானவர் ரா சங்கரன்.
மௌன ராகம்
கார்த்தி - ரேவதி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் "மௌன ராகம்". இப்படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்து பெரும் பிரபலமடைந்தவர் ரா.சங்கரன்.
இவர் கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அப்படத்தை தொடர்ந்து தேன் சிந்துதே வானம் , துர்கா தேவி, தூண்டில் மீன் என மொத்தமாக 8 படங்களை இயக்கியுள்ளார். இயக்குனரை தாண்டி, நடிகராக இவர் விஜயகாந்தின் சின்ன கவுண்டர், கமலின் சதிலீலாவதி, அஜித்தின் அமராவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 92வயதான அவர் வயது மூப்பின் காரணமாக மறைந்துள்ளார். இவரது மறைவு தமிழ் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையுலகத்தை சார்ந்த பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், , “எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் சாரின் மறைவு வேதனை அளிக்கிறது.
எனது ஆசிரியர்
— Bharathiraja (@offBharathiraja) December 14, 2023
இயக்குனர் திரு.ரா.சங்கரன்
சார் அவர்களின் மறைவு
வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/SJmO0dApeq
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.