நா யாரு கூட இருந்தேன்..அவரு பக்கத்துல இருந்து பாத்தாரா..! விளாசிய தினேஷ்
தான் பெண்களுடன் இருந்ததாக பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் தெரிவித்த நிலையில், அதனை நடிகர் தினேஷ் கடுமையாக கண்டித்துள்ளார்
நடிகர் தினேஷ்
நடிகர் தினேஷ் ரச்சிதா சின்னத்திரையில் பிரபல தம்பதிகளாக வளம் வந்த ஜோடி தினேஷ் - ரச்சிதா மகாலக்ஷ்மி. சில ஆண்டுகள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், பின்னர் கருத்து பிரச்னையை காரணமாக பிரிந்து தற்போது தனி தனியே வாழ்ந்துவருகின்றனர்.
அவ்வப்போது இவர்கள் இருவரை குறித்தும் பல தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வானும் தனது கருத்தை தெரிவித்தார். அவர் இவர்கள் குறித்து அளித்த பேட்டியில், தினேஷ் தினமும் குடித்துவிட்டு பல பெண்களோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் இப்படிப்பட்ட ஒரு நபரோடு ஒரு பெண் எப்படி வாழ முடியும்? என்ற காரணத்தால் அதனால் தான் ரச்சிதா அவரை விட்டு பிரிந்து விட்டார் என பேசியதாக கூறப்படுகின்றது.
எச்சரித்த தினேஷ்
இந்த கருத்திற்கு நடிகர் தினேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தான் குடித்துக் கொண்டிருக்கும் போது என் பக்கத்தில் இருந்து பார்த்தாரா? என வினவிய தினேஷ், தான் பெண்களோடு சுற்றிக் கொண்டிருந்தேன் என்று சொல்கிறாரே அதை அவர் பார்த்தாரா? என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பயில்வான் தனக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது என சாடிய தினேஷ், இதற்கெல்லாம் ரியாக்ட் ஆகி நான் அவரிடம் சண்டை போட்டு என்னுடைய டைமை வேஸ்ட் பண்ண விரும்பவில்லை என கூறி, ஆனால் ஒரு கட்டத்தில் அவர் வரம்பு மீறி பேசினால் நான் அதை பார்த்துட்டு சும்மா இருக்க போறதும் கிடையாது என எச்சரித்துள்ளார்.