பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்! திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி!
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் தனது 98 வயதில் மும்பையில் இன்று காலமானார். புகழ்பெற்ற மதுமதி, மொகலே ஆசாம், ராம் அவுர் ஷ்யாம், லீடர் போன்ற 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் திலீப்குமார். பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானில் பிறந்த அவரது இயற்பெயர் யூசப் கான்.

மும்பைக்கு குடிவந்த பிறகு பிறகு 19944ஆம் ஆண்டு ஜ்வார் பாட்டா படம் மூலம் பாலிவுட்டில் நடிக்க தொடங்கி இந்தியாவின் முது பெரும் நடிகராக விளங்கினார்.
அழுத்தமான வசன உச்சரிப்பு, முகபாவங்களால் பல ரசிகர்களின் அன்பை அவர் பெற்றிருந்தார். பத்மவிபூஷன், தாதா சாகேப் பால்கே உள்பட ஏராளமான உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

2000 முதல் 2006 வரை அவர் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக பதவி வகித்தார். முதுமை காரணமாக நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அரசியல்
கட்சியினர், திரையுலகினர் என ஏராளமானோர் திலீகுமாரின்
மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.