நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு ; நடிகர் திலீப்பை கைது செய்ய தடை

actor dileep sexual violence case bail granted
By Swetha Subash Jan 14, 2022 01:00 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கின் விசாரணை 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.

பிரபல இயக்குனர் பாலசந்திரகுமார் நடிகர் திலீப்புக்கு எதிராக போலீசில் அளித்துள்ள ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.

பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டில் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் பல்சர் சுனில் இப்போதும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் நடிகர் திலீப் 74 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

இந்த நிலையில் இயக்குநர் பாலசந்திரகுமார் வாக்குமூலத்தில், பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் விசாரணை அதிகாரியை லாரியை ஏற்றி கொல்ல திலீப் திட்டமிட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் நடிகை கடத்தப்பட்ட சம்பவம் நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் நடிகர் திலீப்பின் சகோதரர் அனூப்பிற்கும் நன்றாக தெரியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வழக்கு விசாரணையில் இருந்து டிஜிபி சந்தியாவை மாற்றக்கோரி திலீப்பின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜபி ஒருவர், அமைச்சரிடம் போனில் பேசியதாகவும் கூறியிருக்கிறார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இனிமேல் நாம் தான் இறுதி முடிவினை எடுக்க வேண்டும் எனவும் அந்த விஜபி, திலீப்பிடம் சொன்னதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விசாரணை அதிகாரியை கொல்ல சதிதிட்டம் தீட்டியதாக திலீப் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் திலீப் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பு ஏற்பட்டநிலையில், திலீப் சார்பில் முன் ஜாமீன் மனு கோரப்பட்டுள்ளதால், வரும் 18-ம் தேதி வரைக்கும் கைது செய்யக்கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.