தனுஷை டார்ச்சர் செய்யும் ரஜினி குடும்பத்தினர்..இப்படி சிக்கலில் சிக்கிட்டாரே
தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ் பாடலாசிரியர்,இயக்குநர்,தயாரிப்பாளர்,என பல துறைகளில் கால்பதித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் தனது ஒண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்த முதல் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் எதிர்நீச்சல்.
அதன் பின் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டானது.இதன் மூலம் வசூலை வாரி குவித்தது.
அதன் பிறகு நடிகர் தனுஷ் தயாரித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில் கடனாளியானர் நடிகர் தனுஷ்.
இதையடுத்து நடிகர் தனுஷிற்கு முன் வந்தார் அவருடைய மாமனாரும் நடிகருமான ரஜினிகாந்த். தான் நடித்த காலா படத்தை தயாரிக்க சொல்லி அதன் மூலம் வரும் பணத்தை வைத்து கடனை அடைக்க சொல்லி அறிவுரை கூறினார்.
இந்நிலையில் காலா படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் கடனில் சிக்கி தவித்தார் தனுஷ். அதனால் நடிகர் ரஜினி தான் நடித்ததற்கான சம்பளத் தொகையை வாங்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து படம் தயாரிப்பதை நிறுத்திய நடிகர் தனுஷ் கடன் அடைக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியதாக கூறப்படுகிறது.
அதனால் பல படங்களில் நடித்து நடிகர் தனுஷ் தனது கடனை ஓரளவு அடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக தனது சமூக வளைதல பக்கத்தில் கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்தது. இதனால் கடும் கோபத்தில் உள்ள ரஜினியின் குடும்பத்தினர் தனுஷிடம் ரஜினி காலா படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை கொடுக்க சொல்லி டார்ச்சர் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடன்களை ஓரளவு அடைத்த மன நிம்மதியில் இருக்கும் தனுஷுக்கு மீண்டும் ஒரு புதிய பிரச்சனை கிளம்பி உள்ளதால் அவர் மன குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
You May Like This

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த கர்ப்பிணி அரச அதிகாரி: கணவர் ஐந்து மாதங்களின் பின் அதிரடி கைது IBC Tamil
