தனுஷின் அடுத்தக்கட்ட முடிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் - இதுதான் அந்த திட்டமா?
நடிகர் தனுஷின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் அறிவித்தனர்.
இந்த பிரிவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் தொடர்ந்து தனுஷூம், ஐஸ்வர்யாவும் திரையிலகில் தங்களது அடுத்தடுத்த வேலைகளில் பிசியாக உள்ளனர். அந்த வகையில் தனுஷ் தற்போது மாறன், வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
#Dhanush is back in Hyderabad for #Vaathi shoot. Here he is enjoying a grand lunch today at the popular @1980smilitary. pic.twitter.com/5F53SD9Vsa
— Kaushik LM (@LMKMovieManiac) February 16, 2022
விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் கூட யாருடனும் சரியாக பேசுவதில்லை என்று வெளியான தகவல்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்றைய தினம் வாத்தி படப்பிடிப்பில் தனது மூத்த மகன் யாத்ராவுடன் அவர் சிரித்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதேபோல் ஹோட்டல் ஒன்றில் தனது ஸ்டைலிஸ்ட் உதவியாளருடன் அவர் உணவருந்தும் புகைப்படமும் வெளியானது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் விவாகரத்து சம்பவம் குறித்து எந்த கவலையும் இல்லாமல், கவலைப்பட்டு கொண்டே இருந்தால் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியாது என்பதை தனுஷின் சிரிப்பு உணர்த்துவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றாலும் மகன்களுடனான அவரின் பாசப்பிணைப்பு ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.