நடிகர் தனுஷின் மறுபக்கம் - யாரும் அறியாத ரகசியத் தகவல்

life தனுஷ் actor-Dhanush interesting-story வாழ்க்கை
By Nandhini Feb 16, 2022 08:22 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பன்முகத் திறமை கொண்டவர். பிரபல நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார்.

இந்நிலையில், தனுஷ் குறித்து சுவாரஸ்யமான தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. சினிமா மீது உள்ள ஆர்வத்தால் இவரின் பெயரை தனுஷ் என்று மாற்றிக்கொண்டார்.

‘குருதிப்புனல்’ படத்தில் கமல் நடிப்பைப் பார்த்து வியந்து போன தனுஷ் சினிமா மேல் ஆர்வம் வந்துள்ளது.

தந்தை கஸ்தூரி ராஜா, தனுஷிற்கு சினிமாவில் பெயரை வைக்க யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, தனுஷ் தந்தையிடம் எனக்கு ‘குருதிப்புனல்’ பட கதாபாத்திரத்தில் வரும் ‘தனுஷ்’ என்ற பெயரையை வையுங்கள் என்று கூற, அந்தப் பெயரையை வெங்கடேஷ் பிரபுவிற்கு பதிலாக தனுஷ் என்று வைத்தாராம் கஸ்தூரி ராஜா.

நடிகர் தனுஷின் மறுபக்கம் - யாரும் அறியாத ரகசியத் தகவல் | Actor Dhanush Life Interesting Story

நடிகர் தனுஷ் மிகுந்த சிவன் பக்தராம். அதனால், சைவ உணவை மட்டுமே சாப்பிடுவாராம். அதனால்தான் தன் இரு மகன்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று பெயர் வைத்துள்ளார்.

தனுஷ் எப்போதெல்லாம் கவலையாக இருப்பாரோ அப்போதெல்லாம் சிவன்கோவிலுக்கு சென்று விடுவாராம். பள்ளியில் படிக்கும் போது சமையல் வல்லுனராக ஆக வேண்டும் என்பதுதான் தனுஷின் ஆசையாம். ஆனால், சினிமாவில் நடிகராவிட்டார்.

தற்போதுகூட நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிடித்த உணவுகளை தானே சமைப்பது சாப்பிடுவாராம்.