கவலையால் உடல் மெலிந்து போன நடிகர் தனுஷ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Dhanush Fans Movie Actor Body Shocking நானேவருவேன் NaaneVaruven நடிகர்தனுஷ் Thin
By Thahir Apr 12, 2022 02:57 AM GMT
Report

திரைப்படத்திற்காக உடல் எடை குறைந்த நிலையில் இருக்கும் நடிகர் தனுஷை அவரது ரசிகர்கள் வேதனையுடன் பார்த்து வருகின்றனர்.

அண்மையில் நடிகர் தனுஷ் குறித்தான செய்திகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவரின் செயல்பாடுகளை குறித்து அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.

கவலையால் உடல் மெலிந்து போன நடிகர் தனுஷ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! | Actor Dhanush Is Thin Fans Shocking

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளன.

இது குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படம் அனைவரது பாராட்டையும் பெற்று வந்தாலும் அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் உடல் எடையை குறைத்திருப்பதாக அவரது ரசிகர் கூறி வந்தாலும் கூட சில ரசிகர்கள் அவர் கவலையால் தான் உடல் எடை குறைந்துள்ளதாகவும்,அவரின் உடம்பை பார்த்துக்கொள்ள வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.