Wow... மிக பிரபலமான இந்திய நடிகர் பட்டியல் வெளியீடு - முதல் இடத்தை தட்டித்தூக்கிய நடிகர் தனுஷ்...!

Dhanush Tamil Cinema
By Nandhini Dec 07, 2022 07:33 AM GMT
Report

மிக பிரபலமான இந்திய நடிகர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

வேட்டி சட்டையில் கலக்கிய தனுஷ்

சமீபத்தில் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் நடந்த போது, செம்ம கெத்தாக மகன்களுடன் கோட்டு - சூட்டில் மாஸ் காட்டினார் நடிகர் தனுஷ். இதனையடுத்து, மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு அனைவருமே கோட்டு - சூட்டு வந்தனர். நடிகைகள் படு மாடர்ன் உடையில் வந்தனர். ஆனால், நடிகர் தனுஷ் மிகவும் எளிமையாக கதர் வேஷ்டி சட்டையில் வந்து அனைவரையும் மிரள வைத்தார். இதன் பின், நடைபெற்ற ‘தி கிரே மேன்’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் வேஷ்டி-சட்டை அணிந்து வந்து அசத்தினார்.

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம்

தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, வசூல் சாதனையும் படைத்துள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் 5 ஆண்டுகள் கழித்து தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

actor-dhanush-frist-place

நடித்து வரும் படங்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில், ‘வாத்தி’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகிறது. அதேபோல் ‘வட சென்னை’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் ‘வாத்தி’ படம் வெளியாகியுள்ளது.

முதல் இடத்தைப் பிடித்த தனுஷ்

2022ம் ஆண்டிற்கான ஐஎம்டிபியின் மிக பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலில், முதல் இடத்தை நடிகர் தனுஷ் பிடித்துள்ளார். 2-வது இடத்தில் ஆலியா பட்டும், 3வது இடத்தில் ஐஸ்வர்யா ராய், 5-வது இடத்தில் சமந்தாவும் 9 மற்றும் 10வது இடத்தில் அல்லு அர்ஜுனும், யஷ்ஷும் உள்ளனர்.