11 வருடங்களுக்கு பிறகு.. ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன் - நடிகர் தனுஷ் வேதனை!
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். நடிப்பு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், இயக்கம் என அனைத்திலும் கலக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஹாலிவுட் வரை சென்று "தி கிரே மேன்" என்ற திரைப்படத்தில் நடித்தார் தனுஷ்.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தனுஷும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இவர்களின் திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் இருக்கிறது.
எமோஷனல் பதிவு
ஆனால் இரண்டு பேரும் இன்னும் விவாகரத்து வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் 11 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸானது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தனுஷ் "3 ரீ ரிலீஸ் ரெஸ்பான்ஸை பார்த்து ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டேன். அனைவருக்கும் எனது நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் "மனைவி இயக்கத்தில் தான் நடித்த படத்திற்கு தனுஷ் இவ்வளவு எமோஷனல் ஆகிறாரே. அவர்கள் மீண்டும் இனைந்து வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.