நடிகர் தனுஷ்க்கு தேடிவந்த பிரம்மாண்ட வாய்ப்பு - அடுத்த ‘புஷ்பா’ ஆகிறாரா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் ‘வாத்தி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
சினிமாத் திரையுலகில் ஆல்ரவுண்டர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார் நடிகர் தனுஷ். தமிழை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் திரையுலகிலும் வேற லெவலில் கலக்கி வருகிறார்.
‘வாத்தி’ படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வருகிறது.
இதனையடுத்து, ‘தேசிய விருது’ வென்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘புஷ்பா’ படத்தை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்த பின் அவர் தனுஷ் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.