தனுஷை கோபப்படுத்திய குடும்ப நபர் - ஐஸ்வர்யாவுடன் இணைவதில் சிக்கல்
லதா ரஜினிகாந்த் மீது நடிகர் தனுஷ் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் தனுஷ் இறங்கி வருவதாக தெரியவில்லை என கூறப்படும் நிலையில் ரஜினி மற்றும் இரு மகன்களுக்காக ஐஸ்வர்யா மனம் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் விவாகரத்து சம்பவத்தால் லதா ரஜினிகாந்த் தனுஷின் மீது உச்சகட்ட கோபத்திற்கு ஆளானாராம். இதனால் திரையுலகில் தனுஷிற்கு எதிராக சில கருத்துக்களை அவர் பேசிவருவதாக தகவல்கள் இணையதளங்களில் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட தனுஷ் அவர் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.