கேரளாவில் தவெக - மாநில தலைவராகும் நடிகர் தேவன்
actor devan to joins tvk as kerala state leader: பிரபல மலையாள நடிகரான தேவன் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாகவும், அவருக்கு கேரள மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கேரளாவை சேர்ந்த நடிகர் தேவன்.
அவருடைய கல்லூரி பருவத்தில் இருந்தே கேரள மாணவர் சங்கத்தில் (KSU) உறுப்பினராக இருந்த நிலையில் 2004ம் ஆண்டு கேரள மக்கள் கட்சியை தொடங்கினார்.

பின்னர் 2024ம் ஆண்டு கட்சியை பாஜக-வில் இணைத்ததுடன் கேரள பாஜகவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி பாஜகவில் இருந்து விலகிய நிலையில், தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேவனுக்கு கேரள மாநிலத்தலைவர் பதவி வழங்கலாம் என கூறப்படுகிறது.