நல்லாதான் பேசிகிட்டு இருந்தார்; இரவில் என்ன நடந்தது? டெல்லி கணேஷ் மகன் தகவல்

Tamil Cinema Chennai Death Delhi Ganesh
By Sumathi Nov 10, 2024 04:59 AM GMT
Report

டெல்லி கணேஷின் மரணம் தொடர்பாக அவரின் மகன் பேட்டியளித்துள்ளார்.

டெல்லி கணேஷ் மறைவு

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் மறைவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

delhi ganesh with son

இந்நிலையில் இவரது இறப்பு குறித்து பேசியுள்ள அவரது மகன் மகா, அப்பாவிற்கு 80 வயதாகிவிட்டது. நாங்கள் சமீபத்தில்தான் அவருக்கு 80வது திருமணம் கூட செய்து இருந்தோம். அவர் நன்றாகவே இருந்தார்.

அமரன் படம் குறித்து அனிருத் சர்ச்சை பதிவு - கடுப்பில் ஜிவி பிரகாஷ்!

அமரன் படம் குறித்து அனிருத் சர்ச்சை பதிவு - கடுப்பில் ஜிவி பிரகாஷ்!

மகன் தகவல்

ஆனால் கொஞ்சம் வயோதிகம் காரணம் அவர் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தார். சிகிச்சை கொடுத்து வந்தோம். எங்களிடம் நன்றாக பேசிக்கொண்டு இருந்தார். நேற்று சிரித்தபடி பேசிக்கொண்டு இருந்தார்.

நல்லாதான் பேசிகிட்டு இருந்தார்; இரவில் என்ன நடந்தது? டெல்லி கணேஷ் மகன் தகவல் | Actor Delhi Ganesh Son Gives Death Reason

அவர் சிரித்தபடி இருந்த பின் இரவு ஓய்வு எடுக்க சென்றார். 11 மணிக்கு அவர் உறங்கும் முன் மாத்திரை கொடுப்பது வழக்கம். அப்படித்தான் மாத்திரை கொடுக்க சென்றேன். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.

சோதனை செய்ததில் அவரின் உயிர் பிரிந்திருந்தது. உறவினர்கள் பலர் வர வேண்டும் என்பதால் நாளை இறுதிச்சடங்கு நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.