பழம்பெரும் வில்லன் நடிகர் சலீம்கவுஸ் உயிரிழந்தார் - ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் வலுவான கதாபாத்திரத்திலும், வசனங்களாலும் வில்லனாக நடித்தவர்தான் நடிகர் சலீம் கவுஸ்.
இவர் சர்க்கரை கவுண்டராகச் ‘சின்னக் கவுண்டர்’ படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். அப்படத்தில் நடிகர் விஜயகாந்துக்குக் கடும் சவாலைக் கொடுக்கும் கதாப்பாத்திரமாக நிலைத்து வந்தார்.
தமிழ் சினிமாவில் ‘வெற்றிவேல்’ படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். சலீம் கவுஸ் கமலுடன் ‘வெற்றி விழா’, கார்த்திக்குடன் ‘சீமான்’, சத்யராஜுடன் ‘மகுடம்’, பிரபுவுடன் ‘தர்மசீலன்’, பிரசாந்துடன் ‘திருடா திருடா’, சரத்குமாருடன் ‘சாணக்கியா’, அஜித்துடன் ‘ரெட்’, விஜய்யுடன் ‘வேட்டைக்காரன்’ என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஆனால், நடிகர் ரஜினியுடன் மட்டும் நடித்ததே இல்லை. சலீம் கவுஸ் மும்பையைச் சேர்ந்தவர். இவர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் பிறந்தவர்.
இந்நிலையில், 70 வயதான நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் சினிமாத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.