பழம்பெரும் நடிகர் உன்னிகிருஷ்ண நம்பூதிரி காலமானார் இன்று இறுதிச்சடங்கு: திரையுலகினர் அஞ்சலி

tamil flim namboothiri
By Jon Jan 22, 2021 03:02 PM GMT
Report

மலையாள மற்றும் தமிழ் படங்களில் தாத்தா வேடங்களில் நடித்து பிரபலமானவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 98 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அதன்பின் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் என பரி சோதனை முடிவு வந்ததால், வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அதன்பின் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் இறுதிச் சடங்கு இன்று காலை 11 மணிக்கு கோரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றியே அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.