சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய நடிகர் தர்ஷன் - அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்!
நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தர்ஷனுக்கு சலுகை
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ரசிகரை கடத்தி, கொலை செய்த வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சிறையில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி கோப்பை மற்றும் சிகரெட் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அவருடன் மூன்று பேர் அப்போது அமர்ந்து பேசிக் கொண்டும் இருந்தனர்.
7 பேர் சஸ்பெண்ட்
தொடர்ந்து, தற்போது வீடியோ காலில் தர்ஷன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தர்ஷன் வெளிச்சமான ஒரு அறையில் அமர்ந்துள்ளார். எதிர்முனையில் பேசியவர் உணவு சாப்பிட்டீர்களா என கேட்க, தர்ஷனும் தலையை ஆட்டி சாப்பிட்டதாக சொல்கிறார்.

சுமார் 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவை பார்த்து பலர் அதிர்ச்சியடைந்த நிலையில், இது தொடர்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது.
அதன்படி, தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ஹர ஹார சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil