தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

covid positive chiranjeevi
By Irumporai Jan 26, 2022 05:12 AM GMT
Report

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா ,மூன்றாவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது.

இந்த நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கமல்ஹாசன், வடிவேலு, விஷ்ணு விஷால், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் கடந்த சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அந்த வகையில் தற்போது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இது குறித்து சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில்:

அன்புள்ள அனைவருக்கும், எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக கடைப்பிடித்தும், நேற்றிரவு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரையும் விரைவில் காண ஆவலாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.