தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசியை வழங்கிய நடிகர் சிரஞ்சீவி!

actor chiranjeevi vaccine free
By Anupriyamkumaresan Jun 08, 2021 03:27 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசியை வழங்கிய நடிகர் சிரஞ்சீவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தெலுங்கு ’சூப்பர் ஸ்டார்’ நடிகர் சிரஞ்சீவி, தனது அறக்கட்டளை மூலம் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ச்சியாக செய்துவருகிறார்.

தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசியை வழங்கிய நடிகர் சிரஞ்சீவி! | Actor Chiranjeevi Provide Vaccine Free

சமீபத்தில்கூட, தமிழ் நடிகர் பொன்னம்பலத்தின் அறுவை சிகிச்சைக்கு 2 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று தெலுங்கு திரைப்படத்துறையைச் சேர்ந்த 24 யூனிட் தொழிலாளர்களுக்கும், நடிகர் சிரஞ்சீவி, அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து தடுப்பூசிக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு இலவச தடுப்பூசி வழங்கினார்.

இந்த புகைப்படங்களை நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரது இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.