விபத்திலிருந்து மீண்ட நடிகர் சேரனின் உருக்கமான பதிவு! அனைவருக்கும் நன்றி!
படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகர் சேரன் மீண்டு வந்த நிலையில், தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கு நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது கீழே தவறி விழுந்த சேரனுக்கு காயம் ஏற்பட்டு 8 தையல் போடப்பட்டுள்ளது.
அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "கதைப்படி சேரன் வீட்டை சுற்றி பார்க்கும் போது கீழே விழுமாறு காட்சி. சரவணன் அண்ணனாகவும் சேரன் தம்பியாக நடித்து வருகின்றனர்.
கீழே விழும் காட்சியில் சேரன் நிஜமாகவே வழுக்கி விழுந்துவிட்டார் . அவருக்கு எட்டு தையல் போடப்பட்டது. தையல் போடப்பட்ட அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நடித்துக் கொடுத்தார்.

அந்த வலியிலும் கடந்த மூன்று நாட்கள் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தார். " என்று படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சேரன் தற்போது ரசிகர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”மிக்க நன்றி..
மிக்க நன்றி.. எனக்காக வேண்டிக்கொண்ட, நலம்பெற செய்தி அனுப்பிய, ஆறுதலாய் அன்பு வார்த்தைகள் பகிர்ந்த அனைத்து டுவிட்டர் நண்பர்களுக்கும், பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.. pic.twitter.com/23kvQ8CbY1
— Cheran (@directorcheran) August 8, 2021
எனக்காக வேண்டிக்கொண்ட, நலம்பெற செய்தி அனுப்பிய, ஆறுதலாய் அன்பு வார்த்தைகள் பகிர்ந்த அனைத்து டுவிட்டர் நண்பர்களுக்கும், பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.." என்று தெரிவித்துள்ளார்.