படப்பிடிப்பில் தவறி விழுந்த ஆட்டோகிராப் சேரன் – தலையில் 8 தையல்கள்! ரசிகர்கள் சோகம்!
பிரபல நடிகர் சேரன் படப்பிடிப்பின் போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறார். அதே வேளையில், தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த படத்தில் வீடு ஒன்று முக்கிய பாத்திரமாகவே இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடு கட்டும் படப்பிடிப்பின்போது, வீட்டை சுற்றிப்பார்க்கும் காட்சியில் நடித்துள்ளார் சேரன்.

அப்போது கால் இடறி கீழே விழுந்த சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி இருக்கிறது. இதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரனின் தலையில் எட்டு தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், தையல் போட்ட நிலையிலும், படபிடிப்பு தளத்திற்கு சென்று, தனது காட்சிகளை முடித்து கொடுத்திருக்கிறார் நடிகர் சேரன். இவரது இந்த செயலால் அப்படக்குழு நெகிழ்ச்சியடைந்துள்ளது.