நடிகர் சூர்யாவுடன் எடுத்த முதல் அழகிய செல்பியை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த தம்பி கார்த்தி!

wishes birthday surya actor karthi
By Anupriyamkumaresan Jul 23, 2021 08:42 AM GMT
Report

நடிகர் சூர்யாவுடன் எடுத்த முதல் செல்பியை வெளியிட்டு நடிகர் கார்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு இன்று 46வது பிறந்த நாள். இதன் காரணமாக காலை முதலே ஏராளமான பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை அள்ளி குவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யாவுடன் எடுத்த முதல் அழகிய செல்பியை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த தம்பி கார்த்தி! | Actor Brother Karthi Wishes For Surya

ஏராளமான பிரபலங்கள் தாங்கள் சூர்யாவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி தனது இஸ்டாகிராம் பக்கத்தில், சூர்யாவுடன் வெளிநாட்டில் எடுத்த முதல் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் சூர்யாவை என்னுடைய வழிகாட்டி என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தட்டி வருகின்றனர்.