சர்க்கரை நோயால் நடிகர் பரத் கல்யாண் மனைவி உயிரிழப்பு - திரைத்துறையினர் இரங்கல்
சீரியல் தொடர்களில் நடித்து வந்த பரத் கல்யாண் மனைவி பிரியா இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.
பரத் மனைவி உயிரிழப்பு
90களில் பிரபலமான நடிகர் பரத் கல்யாண் தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார்.

பிரியா கடந்த மூன்று மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பேலியோ டயட்டை முறையாக பின்பற்றாததால் டயாபடிக் வந்துள்ளது.
இதற்காக இவர் சிகிச்சை பெற்று வந்து்ளளார். உடல் நிலை மோசமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
3 மாதங்கள் சுயநினைவு இல்லாமல் கோமாவில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
43 வயதாகும் பிரியாவின் இறுதிச் சடங்கு நாளை காலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பரத் கல்யாண் - பிரியா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
பிரியாவின் திடீர் மரணம் அவருடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரியாவின் மறைவை அடுத்து திரைத்துறையினர் பரத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan