அனாதையாக வந்தவர்.. அனாதையாகவே போகக் கூடாது : போண்டாமணிக்கு உதவ கண்ணீர் விட்ட நடிகர்

Viral Photos
By Irumporai Sep 21, 2022 08:56 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பெரும் காமெடி நடிகர்களுடன் இணிந்து பலவேறு படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் போண்டா மணி, தற்போது 50 வயதாகும் போண்டாமணி ஏற்கனவே உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

உடல் நலக்குறைவினால் போண்டா மணி 

இந்த நிலையில் தற்போதுதற்போது மீண்டும் இவர் இரண்டு கிட்னிகளும் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வரும் இவருக்கு உதவுமாறு காமெடி நடிகர் பெஞ்சமின் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனாதையாக வந்தவர்.. அனாதையாகவே போகக் கூடாது :  போண்டாமணிக்கு உதவ கண்ணீர் விட்ட நடிகர் | Actor Benjamin Request Help In Actor Bonda Mani

நாடுவிட்டு நாடு வந்து, இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்து இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும். 

நடிகர் பெஞ்சமின்

 உங்களால் முடிந்தால் அரசியல் தலைவர்களிடமோ, நண்பர்களிடமோ சொல்லி அண்ணன் போண்டா மணியை காப்பாற்ற வேண்டும். இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர்.

அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஷ்'என அந்த வீடியோவில் பெஞ்சமின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது .

அனாதையாக வந்தவர்.. அனாதையாகவே போகக் கூடாது :  போண்டாமணிக்கு உதவ கண்ணீர் விட்ட நடிகர் | Actor Benjamin Request Help In Actor Bonda Mani

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் போண்டா மணி அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் சக நடிகர்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்