ஜெயம் ரவியால் தான் என் கெரியரே போச்சு - புலம்பி தள்ளிய காதல் பரத்!

Jayam Ravi Tamil Cinema Tamil Actors
By Vinothini Jul 31, 2023 08:25 AM GMT
Report

நடிகர் பரத் தனது கெரியர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

காதல் பரத்

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் அதனை தொடர்ந்து காதல், செல்லமே, நேபாளி, வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த காதல் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்தார், அதனால் இவரை காதல் பரத் என்றே பலர் கூறுவர்.

actor-barath-opens-about-his-carreer

தற்பொழுது பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ள 'லவ்' இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இவருடன் வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் அவரது கேரியர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் புலம்பல்

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் பரத் கூறுகையில், "தனது தோல்விக்கு நான் மட்டுமே காரணம்" என வெளிப்படையாகக் கூறியுள்ளார். "முக்கியமாக நேபாளி படத்தில் நிறைய படுக்கையறை காட்சிகள் இருக்கும்.

actor-barath-opens-about-his-carreer

அதுமட்டும் இல்லாமல் அந்தப் படம் A சான்றிதழுடன் வெளியானது. அதன் காரணமாக ஃபேமிலி ஆடியன்ஸ் யாரும் நேபாளி படம் பார்க்க தியேட்டருக்கு வரவில்லை. அப்பொழுது ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படம் வெளியாகியிருந்தது.

ஃபேமிலி சென்டிமெண்ட் படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனால் நேபாளி படம் தோல்வியடைந்ததோடு, அதிலிருந்து தனது கெரியரும் சரியத் தொடங்கியது" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.