தூங்கிய குழந்தையை அடித்த பாலகிருஷ்ணா கடுப்பான நெட்டிசன்கள் : வைரலாகும் வீடியோ

Nandamuri Balakrishna
By Irumporai Jun 03, 2022 09:25 AM GMT
Report

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமராவின் மகனான இவர், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாகவும் தற்போது உள்ளார்.

பாலகிருஷ்ணா படங்களுக்கு என்றே டோலிவுட்டில் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. ஆனால் ட்ரெய்னை பின்னோக்கி ஓட வைப்பது, கோழிகளை வைத்து எதிராளிகளை வீழ்த்துவது, வித்யாசமாக பரத நாட்டியம் ஆடுவது உள்ளிட்ட அவரது படக் காட்சிகள் இன்றைய இண்டர்நெட் காலக்கட்டத்தில் பெரும் ட்ரோல் மெட்டீரியலாகி நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்குள்ளாக்கப்பட்டும் , விமர்சனங்களைப் பெற்றும் வருகின்றன.

அந்த வகையில் முன்னதாக தன்னுடன் ஃபோட்டோ எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் குழந்தையை, பாலகிருஷ்ணா தூக்கத்திலிருந்து அடித்து எழுப்பி போஸ் கொடுக்க வைக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஒரு பக்கம் நெட்டிசன்களை இந்த வீடியோ சிரிப்பில் ஆழ்த்தினாலும், மற்றொரு பக்கம் இது மிக மோசமான செயல் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.