பாலாவின் முன்னாள் மனைவி அந்த நபருடன் நெருக்கம்... - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

By Nandhini May 28, 2022 10:32 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. இவர் சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உட்பட வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இவருடைய தம்பிதான் பாலா. இவர் ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். காதல் கிசுகிசு, வீரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலா கடந்த 2010ம் ஆண்டு அம்ரிதா சுரேஷ் என்ற பாடகியை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்கள் 12 ஆண்டுகள் வாழ்க்கை நடத்திய பிறகு, சில கருத்து வேறு பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனையடுத்து, நடிகர் பாலா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, பாலாவின் முன்னாள் மனைவியுடன் பிரபல இணையமைப்பாளர் கோபி சுந்தருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. புகைப்படத்தை வெளியிட்டு எங்களிடையே புதிய உறவு மலர்ந்துள்ளதை சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்களும், நண்பர்களும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாலாவின் முன்னாள் மனைவி அந்த நபருடன் நெருக்கம்... - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் | Actor Bala Viral Photo