டார்லிங் திரைப்பட காமெடி நடிகர் பால சரவணன் தந்தை கொரோனாவுக்கு பலி! ஒரே குடும்பத்தில் இருவர் உயிரிழந்த சோகம்!

covid actor bala saravanan father death
By Anupriyamkumaresan Jun 11, 2021 08:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தமிழ் திரையுலக காமெடி நடிகர் பால சரவணின் தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

டார்லிங், பண்ணையாரும் பத்மினியும், ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர்தான் காமெடி நடிகர் பால சரவனண்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இவரது தங்கையின் கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

டார்லிங் திரைப்பட காமெடி நடிகர் பால சரவணன் தந்தை கொரோனாவுக்கு பலி! ஒரே குடும்பத்தில் இருவர் உயிரிழந்த சோகம்! | Actor Bala Saravanans Father Death Covid Attack

இதனால் மனமுருகிய நடிகர் பாலகிருஷ்ணன் அனைவரும் பாதுகாக்க இருக்க கோரியும், மாஸ்க் அணிய கோரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த சூழலில், தங்கையின் கணவர் மறைந்து ஒரு மாத காலமே ஆன நிலையில், தற்போது பால சரவணின் தந்தை ரெங்கநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மதுரையில் உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த கொரோனா தொற்றால் இருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

டார்லிங் திரைப்பட காமெடி நடிகர் பால சரவணன் தந்தை கொரோனாவுக்கு பலி! ஒரே குடும்பத்தில் இருவர் உயிரிழந்த சோகம்! | Actor Bala Saravanans Father Death Covid Attack