என் மனைவியை என்கிட்ட இருந்து பிரிச்சது அந்த இசையமைப்பாளர்தான் - பாலா பளீச்
மனைவியை தன்னிடம் பிரித்துவிட்டதாக பிரபல இசையமையமைப்பாளர் மீது நடிகர் பாலா குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் பாலா
இயக்குநராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து, கங்குவாவை இயக்கி வருகிறார். இவரது தம்பி பாலா அன்பு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் பெரிதாக வரவேற்பு இல்லாத நிலையில் மலையாளத்தில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். பிரபல இசை நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.
விவாகரத்து
அப்போது அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 1 பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். அதனையடுத்து, பாடகி அம்ருதா சுரேஷ் இசையமைப்பாளர் கோபி சுந்தரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், நடிகர் பாலா நான் அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் உண்மை. அவரை சட்டபடி விவாகரத்து செய்ததும் உண்மை தான். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் யாருக்கும் தெரியாது. இது எல்லாவற்றுக்கும் இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான் காரணம்.
அவர்கள் இருவரும் எப்படி இருந்தார்கள் என எல்லாமும் எனக்குத் தெரியும். சில விஷயங்களை பொது இடத்தில் பகிர்வதில் தனக்கு விருப்பம் இல்லை. உண்மைகளை பேசினால் அது தனது மகளின் எதிர்காலத்தை பாதிக்கும். அதேநேரம் அவர்கள் செய்த எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்.
எனது மகளை கூட பார்க்க விடாமல் என்னை தடுக்கிறார்கள். இவர்கள் கொடுத்த டார்ச்சரால் நான் தற்கொலை வரை சென்று உயிர் பிழைத்தேன். இன்னொரு பக்கம் இப்போது வரையும் அம்ருதா சுரேஷ் பணம் கேட்டு மிரட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் யூனிபோர்மில் டபிள் கேம்!12 வருடங்களாக மாகாண தேர்தல் இல்லை…22 க்கு சர்வஜன தேர்தலாம்! IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan