விஜய் சார்.. உதவி பண்ணுங்க: பிரபல நடிகர் உருக்கம்
முதலமைச்சர் விஜய்யிடம் நடிகர் முத்துக்காளை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
18 வயது கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி இவர் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றத் தொடங்கி நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
வடிவேலுவுடன் இவர் வரும் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது, இதற்கிடையே மதுபழக்கத்திற்கு அடிமையாகி இருந்தவர் அதிலிருந்து மீண்டு படிப்பில் கவனம் செலுத்தினார்.
இந்நிலையில் தனது மனைவியை காப்பாற்றக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், என் மனைவி பெயர் மாலதி, வயது 47, தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அறுவைசிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தேன், அறுவைசிகிச்சை முடிந்து 17 நாட்கள் ஆகிவிட்டது, எனினும் நுரையீரல் தொற்றால் அவதிப்படுகிறார்.
தமிழக முதலமைச்சர் எனது மனைவியின் மேல்சிகிச்சைக்கு உத்தரவிட வேண்டும், விஜய் சார் உதவி செய்தால் நன்றியோடு இருப்பேன் என தெரிவித்துள்ளார்.