எப்பா தெரியாம அப்படி சொல்லிட்டேன்பா... 40 இயக்குநர்கள் சர்ச்சைக்கு அஸ்வின் விளக்கம்

Ashwin ennasollapogirai
By Petchi Avudaiappan Dec 07, 2021 08:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

’என்ன சொல்ல போகிறாய்’ பட ஆடியோ ரிலீஸின்போது அப்படத்தின் ஹீரோ அஸ்வின் கூறியது சர்ச்சையான நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.  

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய ஹீரோ அஸ்வின் கதை கேட்கும்போது பிடிக்கவில்லையென்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகள் கேட்டு தூங்கியிருக்கிறேன். ஆனால், நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இது மட்டும்தான் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் இணையவாசிகளால் விமர்சிக்கப்பட்டது. 

இதுதொடர்பான மீம்ஸ்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் அஸ்வின் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்  ஆடியோ ரிலீஸின்போது என்ன பேசுறதுன்னு தெரியாம ரொம்ப சந்தோஷத்துல இருந்தேன். வாழ்க்கையில் பெரிய நல்ல விஷயம் நடக்குதுன்னு ஒருவித படபடப்புலயும் மேடை பயத்துலயும் கையெல்லாம் நடுக்கத்தோட நின்னுக்கிட்டிருந்தேன்.  

அப்படி இருக்கும்போது எப்படி என்னால ஆணவமாவும் திமிராவும் பேசமுடியும்?என்ன சொல்ல போகிறாய் ஒரு நல்லக் கதை. மக்களுக்கு நல்ல படம் கொடுக்கிறோம்’ என்று சொல்ல வந்ததைத்தான் மேடையில் ’ரிலீஸ் பண்ண விடமாட்டேன்’ன்னு விளையாட்டுத்தனமா சொல்லிட்டேன். எத்தனைப் படம் பண்றோம்ங்கிறதைத் தாண்டி ஒரு நல்லப் படம் பண்ணனும்... அஸ்வின் நல்ல படத்துல நடிச்சிட்டான்னு எல்லோரும் சொல்லணும்... அதுக்கேத்த மாதிரி நான் கதையும் தேர்வு செய்தேன்’ என்பதுதான் மேடையில் நான் சொல்ல நினைத்த விஷயம்.

கதை பிடிக்கலைன்னா தூங்கிடுவேன். 40 கதைகள் கேட்டு தூங்கியிருக்கிறேன்’ என்று ஜாலியா பேசிட்டேன். 40 இயக்குநர்களிடம் கதை கேட்டேன் என்பதில் கணக்கே கிடையாது. அது 50 ஆகவும் இருக்கலாம். பத்தாகவும் இருக்கலாம். நான்காகவும் இருக்கலாம். இதுவரை எத்தனைக் கதை கேட்டேன் என்ற கணக்கும் தெரியாது. மேடையில் இருக்கும்போது ஒரு குத்துமதிப்பா வாயில அந்த டைம்ல சும்மா வந்த ஒரு விஷயம். 

யாரையும் புண்படுத்தணும்ங்கிற நோக்கம் கிடையாது. என்ன சொல்ல போகிறாய் கதை அவ்ளோ பிடித்திருந்தது. மூனு மணிநேரம் போர் அடிக்காம கதை கேட்டேன் என்று சொல்ல வந்தது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. என்னுடன் இருந்தவர்களுக்கு நான் எந்த அர்த்தத்தில் பேசினேன் என்பது தெரியும் என கூறியுள்ளார்.