வெள்ளை என்பது நிறம்தான், அழகு கிடையாது புரியுதா.. தொகுப்பாளினியை அலறவிட்ட அசோக் செல்வன்!
நிறம் பற்றிய கேள்விக்கு கோவமாக பதிலளித்துள்ளார் நடிகர் அசோக் செல்வன்.
நடிகர் அசோக் செல்வன்
தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் மிகவும் கவனம் பெறுபவராக அசோக் செல்வன் இருந்து வருகின்றார். தெகிடி, சூது கவ்வும், கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, போர் தொழில் என சிறப்பான படங்களில் நடித்து வரும் அசோக் செல்வன்.
தற்போது நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம் "நீங்கள் பார்ப்பதற்கு ஹாண்ட்ஸமாக , ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள்.
ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நிறைய பேருக்கு பக்கத்து வீட்டு பயனை போல் இருக்கும் தனுஷ், விஜய் சேதுபதி போன்றோரைத்தான் பிடித்திருக்கிறது. நீங்கள் Fair ஆக (வெள்ளையாக) இருக்கிறீர்கள். உங்களது அழகு உங்களுக்கு ப்ளஸ்ஸா இல்லை மைனஸ்ஸா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
பேட்டி
அதற்கு கடுப்பான அசோக் செல்வன் "நீங்கள் எதை பார்த்து அழகு என்று சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய கண்ணுக்கு தனுஷ், விஜய்சேதுபதி இருவரும்தான் அழகு. வெள்ளையாக இருந்தால் அழகா உங்களுக்கு? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த பெண் தொகுப்பாளர், "இப்போது உள்ள பெண்கள் நாங்கள் எல்லாம் அப்படி உள்ளவர்களைத்தான் சைட் அடிப்போம்" எனக் கூறினார். அதற்கு பதிலளித்த அசோக் செல்வன் "வெள்ளை என்பது நிறம்தான், அழகு கிடையாது புரியுதா. வெள்ளையாக இருப்பவன் அழகு, கருப்பாக இருப்பவன் அழகு இல்லை என்பதெல்லாம் தவறான ஒன்று.
ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவு கிடையாது. அதேபோல் தான் இதுவும். உங்கள் புரிதலை மாற்றுங்கள். பெண்கள் யாரவது எனக்கு வெள்ளையாக இருக்கும் மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்வதை கேட்டாலே எனக்கு கடுப்பாகும்" என்று அசோக் செல்வன் பேசியுள்ளார்.
You May Like This Video