நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது - நடிகர் விஷால் ட்வீட்!

pair girl baby actor arya sayisha baby born
By Anupriyamkumaresan Jul 24, 2021 07:27 AM GMT
Report

நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா - சாயிஷா ஜோடி கடந்த 2019 ஆண்டு, மார்ச் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் சாயிஷா காப்பான் மற்றும் டெடி திரைபடத்தில் நடித்திருந்தார்.

நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது - நடிகர் விஷால் ட்வீட்! | Actor Arya Sayisha Give Birth Female Baby

இந்நிலையில் ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், இந்த செய்தியை சொல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் நான் மாமாவாகி உள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எனது சகோதரர் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும் ஆர்யா அப்பாவாக புதிய பொறுப்பை எடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.