அன்பு மகளுக்கு பெயர் சூட்டிய நடிகர் ஆர்யா - என்ன பெயர் தெரியுமா? ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா தம்பதி, தங்களது அன்பு மகளுக்கு அழகான பெயர் ஒன்றை வைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா.
இவர் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த கதாநாயகி சாயிஷாவை காதலித்து வந்தார். பின்னர் காப்பான், டெடி ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்த இவர்கள், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு சாயிஷா திரைப்படங்களில் நடிப்பதில்லை. தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வருகின்றனர்.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக சாயிஷா, சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்ததது. இந்த குழந்தைக்கு அரைனா என்று பெயர் வைத்துள்ளார்.
இதை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்த ஆர்யாவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆர்யா நடிப்பில் அண்மை வெளியான சார்பட்டா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து விஷாலுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்து வந்தார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது ஆர்யா பதிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.