கோடீஸ்வர வீட்டு பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்த நடிகர் - வெளியான தகவல்!

Arya Sayyeshaa Tamil Cinema
By Vinothini Aug 01, 2023 02:30 PM GMT
Report

நடிகர் ஆர்யாவின் காதல் மனைவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் பல படங்களில் நடித்து பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழில் ஓ மனமே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், பின்னர் பல படங்களில் நடித்தார், மேலும், நான் கடவுள், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

actor-arya-married-rich-women

தற்பொழுது இவர் இயக்குனர் முத்தையா இயக்கிய காதர் பாட்ஷா படத்தில் நடித்துள்ளார், ஆனால் அது நினைத்த அளவிற்கு வரவேற்பை அளிக்கவில்லை. இவர் சினிமாவில் பிளே பாயாக வலம் வந்துகொண்டிருந்தார், பின்னர், நடிகை சயீஷா உடன் இணைந்து கஜினிகாந்த், டெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

காதல் திருமணம்

இந்நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2021ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தனது மகள் ஆர்யானா பெயரிலேயே இவர்கள் ஒரு இன்ஸ்டா பக்கமும் திறந்து புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

actor-arya-married-rich-women

தற்பொழுது நடிகர் ஆர்யா குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகை சயீஷா கோடீஸ்வர வீட்டு பெண் என்றும் இவரது தாத்தா தான் பாலிவுடில் மிக பெரிய ஸ்டாராக இருந்துள்ளார்.

actor-arya-married-rich-women

இவரது தாய் மற்றும் தந்தை இருவருமே பாலிவுட்டில் மிக பெரிய ஸ்டாராக இருந்துள்ளனர். அதனால் கோடீஸ்வர வீடு பெண் என்பதால் நடிகர் ஆர்யா திட்டமிட்டு தனது காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.