என் குழந்தைங்க கிட்ட என்ன பத்தி அப்படி ஒரு கேள்வி கேட்டாங்க..நொறுங்கிட்டேன் - அரவிந்த்சாமி வேதனை!
பெண் ஒருவர் குழந்தைகளிடம் தன்னை கிண்டல் செய்த விதம் வேதனையளித்ததாக அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
அரவிந்த் சாமி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. ரோஜா, பாம்பே, மின்சார கனவு உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றார்.
அதன்பின், சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் தனி ஒருவன் திரைப்படம் மூலம் கம் பேக் கொடுத்தார். வில்லனாக களம் இறங்கி அசத்தினார். இந்நிலையில், தன்னால் மறக்க முடியாத நிகழ்வு குறித்து அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர்,
உடல் நிலை
நான் குண்டாக சொட்டையாக இருந்ததை மறைக்க விரும்பவில்லை. அதற்கான காரணம் அப்போது என்னுடைய உடல் நிலை சரியாக இல்லாமல் இருந்தது தான். அதற்காக நான் நிறைய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். நாங்க ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக போயிருந்த போது நான் சாப்பாட்டை எடுக்க சென்றிருந்தேன்.
அப்போது அங்கு இருந்த ஒரு பெண் ஒருவர் என்னுடைய குழந்தையை பார்த்து உன்னுடைய அப்பாவை குறைவாக சாப்பிட சொல்லு என்று கிண்டல் செய்தார். இது கண்டிப்பா என்னை பெருசா பாதித்திருக்காது. ஆனால் என்னுடைய குழந்தையை கண்டிப்பா பாதித்திருக்கும்.
நீங்கள் என்னை பற்றி எது வேண்டும் என்றாலும் பேசலாம். அதை நான் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வேன். ஆனால் குழந்தை அப்படி கிடையாது அதனால மனிதர்கள் அடுத்தவர்களின் நிலைமையை அறிந்து செயல்பட வேண்டும் என வேதனை தெரிவித்துள்ளார்.