அரவிந்த் சாமிக்கு இவ்வளவு அழகான மகனா? – இணையத்தை கலக்கும் போட்டோஸ்.!

Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vidhya Senthil Sep 27, 2024 07:01 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

  நடிகர் அரவிந்த் சாமியின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது.

அரவிந்த் சாமி

தமிழ் சினிமாவில் 80, 90களில் ரோஜா, பாம்பே, மின்சார கனவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் பல இளம் பெண்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.முன்னணி நடிகராகவும் வளம் வந்த அரவிந்த் சாமி ரோஜா படத்தின் நடிப்பிற்காக தேசிய விருதையும் வாங்கினார்.

aravind swamy

கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஒரு விபத்து ஏற்பட அதனால் உடல் எடை கூடி, தலைமுடி எல்லாம் கொட்டி மொத்தமாக மாறினார். இதனால் சில ஆண்டுகளாகத் திரைப்படங்களில் எதுவும் நடிக்காமலிருந்த அரவிந்த்சாமி, தனி ஒருவன் திரைப்படம் மூலம் கம் பேக் கொடுத்தார்.

அரவிந்த் சாமி அப்பா நான் தான்..பிறந்ததுமே தத்து கொடுத்துட்டோம்....சீரியல் நடிகர் பேட்டி

அரவிந்த் சாமி அப்பா நான் தான்..பிறந்ததுமே தத்து கொடுத்துட்டோம்....சீரியல் நடிகர் பேட்டி

அதுவரை ரொமான்டிக் ஹீரோவாக நடித்து வந்த அவர், இந்த திரைப்படம் மூலம் வில்லனாகக் களம் இறங்கினார். தனி ஒருவன் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தைக் கச்சிதமாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள மெய்யழகன் படம் இன்று (செப் 27 ) வெளியாகியுள்ளது.

 மகன்   

நடிகர்  அரவிந்த் சாமியை நாம் சினிமாவில் அதிகம் கொண்டாடுகிறோம், சித்தி, மெட்டி ஒலி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள டெல்லி குமார் தான் அரவிந்த் சுவாமியின் அப்பா. ஆனால் அவரது குடும்பம் பற்றி வெளியே அவ்வளவாகத் தகவல்கள் வந்தது இல்லை.

aravind swamy son

இந்த நிலையில் நடிகர் அரவிந்த் சாமி மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. அதில் அவர் நன்றாக வளர்ந்து அடுத்த அரவிந்த் சாமி போல் உள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.