முதல் சந்திப்பிலேயே மனைவியிடம் அதைப்பற்றி கேட்டேன்; காலை நீட்டிட்டார் - அருண் விஜய் பளீச்!
தனது மனைவியை பெண் பார்க்க சென்றபோது நடந்த சுவாரசியமான விஷயத்தை பற்றி அருண்விஜய் கூறியுள்ளார்
நடிகர் அருண் விஜய்
'முறை மாப்பிள்ளை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். தொடர்ந்து பிரியம், அன்புடன், இயற்கை, மாஞ்சா வேலு, தடையறத் தாக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
அதன் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இதனையடுத்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் அருண் விஜய். அந்த படத்தில் இவர் வில்லன் ரோலில் கலக்கினார்.
அவரை ரசிகர்கள் கொண்டாடினர். இதனையடுத்து குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம், மாஃபியா உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தார். தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' என்ற படத்தி அருண் விஜய் நடித்து வருகிறார்.
கேட்கக்கூடாத கேள்வி
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அருண் விஜய், தனது மனைவியை பெண் பார்க்க சென்றபோது நடந்த சுவாரசியமான விஷயத்தை பற்றி கூறியுள்ளார். அவர் பேசியதாவது "ஹோட்டல் ஒன்றுக்கு பெண் பார்க்க சென்றோம்.
அப்போது பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறினேன். அவங்க குள்ளமாக இருந்ததால், ஹீல்ஸ் போட்டிருந்தாங்க. இதனால், நான் அவரிடம் எவ்வளவு பெரிய ஹீல் போட்டுருக்கீங்க என்று கேட்டேன். ரொம்ப பிடித்து இருந்தது: ஆனால் ஆர்த்தி மிகவும் கேஷுவலாக காலை நீட்டி "இதோ நீங்களே பார்த்துக்கோங்க" என்றார்.
அப்போது தான் தெரிந்தது இதையெல்லாம் பெண்களிடம் கேட்கக்கூடாது என்று. அவர் சொன்ன பதில் எனக்கு பிடித்து விட்டது. பின்னர் இரு வீட்டு பெற்றோரும் பேசி எங்களுடைய திருமணம் நடைபெற்றது" என்று அருண் விஜய் பேசியுள்ளார்.