நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி

covid actor arun vijay test positive self quarantine
By Swetha Subash Jan 05, 2022 12:26 PM GMT
Report

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைக்கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

முன்னதாக 1,03,798 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2731 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,489 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 674 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை மீனா மற்றும் குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் அருண் விஜயும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுரையின் படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ள தான் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.