பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நடிகர் கைது - சென்னையில் பரபரப்பு

Chennai Tamil Nadu Police Crime
By Thahir Feb 16, 2023 09:07 AM GMT
Report

சென்னையில் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சின்னத்திரை நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விடுதி பெண்களிடம் அத்துமீறிய நடிகர் 

சென்னை அம்பேத்துார் விவேக் நகர் குறிச்சி தெருவில் ஸ்ரீ தக்‌ஷனா பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்களாக ஸ்ரீகஜேஷ், மற்றும் அவரது மனைவி நித்யலட்சுமி உள்ளனர். விடுதியின் மேல் பகுதியில் நடிகர் ஸ்ரீகஜேஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த விடுதியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் விடுதியில் வேலுாரைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

விடுதி உரிமையாளர் நடிகர் ஸ்ரீகஜேஷ் அந்த இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

Actor arrested on complaint of kissing woman

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் பாஜக பிரமுகரான அம்பத்துாரைச் சேர்ந்த ரிகன்யா (40) என்பவரிடம் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

கைது செய்த போலீசார் 

இதையடுத்து ரிகன்யா திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் நடிகர் ஸ்ரீ கஜேஷ் மீது புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் நடிகர் ஸ்ரீ கஜேஷ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.

பின்னர் அம்பத்துார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கும் நடிகரின் மனைவி நித்யலட்சுமிக்கும் தொடர் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதியில் தங்கியிருந்த பெண்ணுக்கு நடிகர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.