பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வாகன விபத்தில் சிக்கினார்

accident arnold Schwarzenegger no injuries
By Swetha Subash Jan 23, 2022 06:19 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ப்ரென்ட்வுட்டில் உள்ள சாலை ஒன்றில் வாகன விபத்தில் சிக்கி காயமின்றி தப்பித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நட்சத்திர நடிகரும், முன்னாள் கலிபோர்னியா ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது,

சன்செட் பவுல்வர்ட் மற்றும் ஆலன்ஃபோர்ட் அவென்யூ சந்திப்பில் மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வாகன விபத்தில் சிக்கினார் | Actor Arnold Schwarzennegger Met With An Accident

இந்த விபத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நடிகர் அர்னால்ட் ஓட்டி சென்ற எஸ்.யு.வி கார், முன் சென்ற சிவப்பு நிற காரின் மீது மோதியுள்ளது. அப்பொழுது ஏர்பேக்குகள் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு அர்னால்ட் உயிர் பிழைத்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது.

மேலும், பல கார்கள் கடுமையான சேதத்துடன் இருப்பதையும் அந்த படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதே விபத்தில், ஒரு பெண் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அர்னால்ட் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வாகன விபத்தில் சிக்கினார் | Actor Arnold Schwarzennegger Met With An Accident

விபத்து நடந்தது தொடர்பாக நடந்த விசாரணையில் வாகனம் ஓட்டியவர்கள் யாரும் போதைப்பொருள் அல்லது மதுபானம் குடித்துவிட்டு விபத்துக்குள்ளானதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து வருகிறது.