எங்க குடும்பத்திற்கே மோடியை பிடிக்கும்; பாஜகவில் சேர்ந்துட்டேனா? நடிகர் அர்ஜுன்

Arjun Narendra Modi Chennai
By Sumathi Jan 20, 2024 03:49 AM GMT
Report

மோடியை சந்தித்தது குறித்து நடிகர் அர்ஜூன் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் அர்ஜூன்

பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். சென்னை நேரு உள் விளையட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்தார்.

arjun about modi

அதன்பின், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது, பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து பேசினார்கள். அந்த வகையில், நடிகர் அர்ஜுன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, அது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

தீவிரமாக காதலித்த அர்ஜூன் - ஆனால் வேறு நடிகரை கல்யாணம் செய்த ஹீரோயின்!

தீவிரமாக காதலித்த அர்ஜூன் - ஆனால் வேறு நடிகரை கல்யாணம் செய்த ஹீரோயின்!

பிரதமர் மோடி

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன், என்னுடைய கோவிலுக்கு பிரதமர் மோடியை வருமாறு அழைப்பு விடுத்தேன். கூடிய சீக்கிரத்தில் வருவேன் என்று அவரும் சொல்லியிருக்கார். அவ்வளவு தான். சும்மா கேஷுவலாகத்தான் சந்தித்து பேசினேன்.

arjun meets modi

இப்போது தான் முதல் முறையாக மோடியை சந்திக்கிறேன். எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர். எங்கள் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் மோடியை பிடிக்கும். ரொம்ப பிடித்தமானவர். அவர் இன்று இங்கே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் உங்களை சந்திக்க வேண்டும் என்று அப்பாயிண்ட்மெண்ட் கேட்டோம். அவரும் உடனே கொடுத்துவிட்டார்.

அதன்படி இப்போது சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம். பாஜகவில் இணைந்து விட்டதாக பரவிய செய்தி குறித்த கேள்விக்கு, அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க. அரசியல் என்பதே எனக்கு அவ்வளவாக தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.