நடிகர் அர்ஜுன் தாயார் காலமானார் - திரைப்பிரபலங்கள் இரங்கல்..!

Arjun
By Thahir Jul 23, 2022 08:59 AM GMT
Report

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா உடல் நலக்குறைவால் இன்று காலமானார் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார். அவருக்கு 85 வயது.

சினிமாவில் அறிமுகம் 

தென்னிந்திய திரையுலகில் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜுன். தமிழில் டாப் ஹீரோவானார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.

நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தென்னிந்தியாவில் தனிப் பெயரைப் பெற்றவர் அர்ஜுன் இவர் பிரபல கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகனாக திரையுலகில் நுழைந்தார்.

நடிகர் அர்ஜுன் தாயார் காலமானார் - திரைப்பிரபலங்கள் இரங்கல்..! | Actor Arjun S Mother Passed Away

முதலில் அவர் போலீஸ் அதிகாரி ஆக விரும்பினார். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நுழைய நேரிட்டது.

அர்ஜுன் தாய் உயிரிழப்பு 

இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் தாய் லட்சுமி தேவம்மா இவர் மைசூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் கிஷோர் சர்ஜா கன்னட இயக்குனர். இரண்டாவது மகன் நடிகர் அர்ஜுன்.

நடிகர் அர்ஜுன் தாயார் காலமானார் - திரைப்பிரபலங்கள் இரங்கல்..! | Actor Arjun S Mother Passed Away

உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லட்சுமி தேவம்மா. அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.