அம்மாவை போலவே அசத்தலாக களமிறங்கிய அர்ச்சனாவின் மகள்..தீயாய் பரவும் புகைப்படம்..!

Thahir
in பிரபலங்கள்Report this article
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருப்பவர் அர்ச்சனா.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்த அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அவரது செயல்களால் சில விமர்சனங்களையும் சந்தித்துள்ளார். அதனை தொடர்ந்து அர்ச்சனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இடையில் மூளையில் ஆபரேஷன் எல்லாம் செய்யப்பட்டு ஓய்வு எடுத்து வந்த அர்ச்சனா மீண்டும் தற்போது பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார்.
அர்ச்சனாவின் மகள் சாரா. அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். மேலும் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது அம்மாவுடன் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் தனது அம்மாவுடன் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.
அதாவது அவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் என்ன நிகழ்ச்சி என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.